உள்ளூர் செய்திகள்

சொற்பொழிவு

புதுச்சேரி : லாஸ்பேட்டை, தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆங்கிலத் துறை சார்பில் முன்னாள் மாணவர்கள் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.கல்லுாரி பாரதியார் கருத்தரங்கு அறையில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஆங்கில துறை தலைவர் கலா வரவேற்றார். கல்லுாரி முன்னாள் மாணவரும், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய ஆங்கிலத்துறை தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஞானசேகரன், ஆங்கில மொழியின் நுணுக்கங்கள் என்ற தலைப்பில், ஆங்கில மொழியின் தனித்தன்மை, அதை சிறப்பாக பயன்படுத்தும் முறைகள் குறித்து பேசினார்.கல்லுாரி முதல்வர் சசிகாந்ததாஸ் தலைமை தாங்கி, தன் மாணவர் பருவ நினைவுகளை நினைவு கூர்ந்து, ஆசிரியர்களை பாராட்டினார். நிகழ்ச்சியில் ஆங்கில துறை வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி