உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 1.34 கோடி மோசடி ; மாஜி ராணுவ வீரருக்கு வலை

தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 1.34 கோடி மோசடி ; மாஜி ராணுவ வீரருக்கு வலை

புதுச்சேரி : ஜிப்மரில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 1.34 கோடி பணத்துடன் மாயமான முன்னாள் ராணுவ வீரரை போலீசார் தேடி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் பாஸ்கர், 40; புதுச்சேரி லாஸ்பேட்டை அன்னை நகரில் வாடகை வீட்டில் குடியிருந்தார். ஜிப்மர் செக்யூரிட்டி பிரிவில் சூப்பர்வைசராக பணியாற்றினார்.ஜிப்மரில் ஒப்பந்த வேலை செய்த பலரிடம், தான் ஜெய்சாய்ராம் எண்டர்பிரைசஸ் பெயரில் தீபாவளி சீட்டு நடத்துவதாக கூறியுள்ளார். இதனை நம்பி ஒப்பந்த ஊழியர்கள் பலர் ஏஜென்டுகளாக மாறி அந்தந்த ஊர்களில் மாதம் ரூ. 1,500 வீதம் வசூலித்து பாஸ்கரிடம் கொடுத்து வந்தனர்.லிங்காரெட்டிப்பாளையம் சக்திவேல், 121 பேரிடம் வசூலித்த ரூ. 20.79 லட்சம் செலுத்தினார். பள்ளி தென்னல் வள்ளி ரூ. 40 லட்சம், சுகுணா 1.5 லட்சம், குப்பம்மாள் ரூ. 25 லட்சம் உட்பட 8 பேரிடம் மொத்தம் ரூ. 1.34 கோடி கொடுத்தனர். பணத்தை பெற்று கொண்ட பாஸ்கர், கடந்த அக்., 20ம் தேதி தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்னதாக தனது வீட்டை காலி செய்துவிட்டு மாயமானார்.பொதுமக்களிடம் பணம் வசூல் செய்த ஏஜெண்டுகள் போன் செய்தபோது, 10 நாட்களில் பணம் தருவதாக உறுதி அளித்துள்ளார். அதற்கு பிறகு மீண்டும் 10 நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளார். கடைசியாக போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். ஏமாற்றப்பட்ட ஏஜென்ட்டுகள் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் முன்னாள் ராணுவ வீரர் பாஸ்கர், அவரது மனைவி பிரேமா, மகன் லோகேஷ்மூர்த்தி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை