உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தி.மு.க., ரத்த தான முகாம்

 தி.மு.க., ரத்த தான முகாம்

புதுச்சேரி: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் காந்தி ஏற்பாட்டில் ரத்த தான முகாம் நடந்தது. தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ரத்ததான முகாம் அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் நேற்று நடந்தது. முகாமிற்கு, தலைமை செயற்குழு உறுப்பினர் காந்தி தலைமை தாங்கினார். முகாமில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், திருபுவனை தொகுதி பொருளாளர் ஜோதி, துணை செயலாளர் ரகு, ஸ்பின்கோ தொ.மு.ச., முரளி, தட்சிணாமூர்த்தி, ராஜாராம், வெங்கடகிருஷ்ணன், அழகப்பன், ஜவகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை