புதுச்சேரி: புதுச்சேரி தி.மு.க., சார்பில், லோக்சபா தேர்தல் பொதுக்கூட்டம் கருவடிக் குப்பம் பாரதி நகரில் நடந்தது.“உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்” என்ற தலைப்பில் புதுச்சேரி லோக் சபா தேர்தல் பொதுக்கூட்டம் காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட கருவடிக்குப்பத்தில் நேற்று நடந்தது.காலப்பட்டு தொகுதி தி.மு.க., செயலாளர் சத்தியவேல் தலைமை தாங்கினார். மீனவர் அணி அமைப்பாளர் கோதண்டபாணி, தொகுதி அவைத்தலைவர் இளம்பரிதி, பொருளாளர் திருமால், துணைச் செயலாளர்கள் நடராஜன், நாகலிங்கம், சர்மிளா, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில இலக்கிய அணித் துணைத் தலைவர் சோமசுந்தரம், அன்பழகன் ஆகியோர் வரவேற்றனர். தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, புதுச்சேரி மாநில அமைப்பாளர், சிவா ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாநில அவைத்தலைவர் சிவக்குமார், தி.மு.க., எம்.எல்.ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், மாநில துணை அமைப்பாளர்கள் குமார், தைரியநாதன், தலை மைச் செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் எம்.பி., திருநாவுக்கரசு, குமரவேல், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, லோகையன், ஆறுமுகம் காந்தி, அருட்செல்வி ஆகியோர் பங்கேற்றனர். மாநில பிரதிநிதி ரவி (எ) முனுசாமி நன்றி கூறினார்.