மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
33 minutes ago
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
2 hour(s) ago | 4
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
4 hour(s) ago | 3
புதுச்சேரி: தமிழக சட்டசபையில் சபாநாயகர் நடவடிக்கை தவறு, எங்களை யாரும் எதுவும் கேட்க கூடாது என்ற மனப்பாங்கு இருக்க கூடாது என கவர்னர் தமிழிசை கூறினார்.ஜிப்மர் மருத்துவமனையில் பொதுசுகாதார கல்வி மையத்தில், நேற்ற மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்த கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது;மக்கள் மருந்தகத்தில் ஒரு ரூபாயிற்கு சானிடரி நாப்கின், ரூ. 1200 மதிப்புள்ள புரோட்டின் பவுடர் ரூ. 200க்கு விற்பனை செய்வதால், மக்கள் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.தமிழக சட்டசபையில் சபாநாயகர் நடவடிக்கை தவறு. கவர்னர் உரை முடிந்த பிறகு தேசிய கீதம் இசைக்காமல் சில கருத்துக்களை சபாநாயகர் கூறியது மிகமிக தவறு. எல்லாவற்றையும் அரசியலாக்க வேண்டாம். தமிழக அரசு எதையும் சரியாக செய்யாது என்பதிற்கு கிளாம்பாக்கம் பஸ் நிலையம் ஒரு உதாரணம்.கிளாம்பாக்கம் பஸ் நிலையமாக இருந்தாலும், கவர்னர் உரையாக இருந்தாலும் எங்களை யாரும் எதுவும் கேட்க கூடாது என்ற மனப்பாங்கு இருக்க கூடாது. நான் ராஜினாமா செய்து கடிதம் கொடுத்ததாக கூறுவது வதந்தி. தெலுங்கானாவில் கவர்னர் உரையை அரசு புறக்கணித்தது. அந்த அரசை மக்கள் புறக்கணித்துள்ளனர் என்பதை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ரகுபதிக்கு கூறுகிறேன் என தெரிவித்தார்.முன்னதாக விழாவில் கவர்னர் பேசுகையில், இந்தியாவில் சிறந்த 10 மருத்துவமனைகளில் ஜிப்மர் 4வது இடம் பிடித்துள்ளது. மருத்துவமனையில் சில சிக்கல்கள் இருந்தாலும், மக்களுக்கு உயரிய சிகிச்சை கிடைக்கிறது. உயர் கல்வி பயின்ற டாக்டர்கள் இங்கு மக்களுக்கு உதவுகின்றனர். மாத்திரைகள் குறித்து மக்களிடம் தவறான கண்ணோட்டம் உள்ளது என கூறினார்.
33 minutes ago
2 hour(s) ago | 4
4 hour(s) ago | 3