உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

நெட்டப்பாக்கம் : கரையாம்புத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ஊர்வலத்தை பள்ளி துணை முதல்வர் சாந்தி துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் டேவிட் சாலமன் ராயன் முன்னிலை வகித்தார். போதை பொருள் ஒழிப்பு செயல்திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். பள்ளியில் துவங்கிய ஊர்வலம், கரையாம்புத்துார் பஸ் நிறுத்தம், குளத்துமேட்டுத் தெரு, பூந்தோட்டம் தெரு வழியாக சென்று மீண்டும் பள்ளி வந்தடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை