உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஓடையில் விழுந்த முதியவர் பலி

 ஓடையில் விழுந்த முதியவர் பலி

புதுச்சேரி: வயல்களில் மாடுகளை மேய்க்கச் சென்ற முதியவர், ஓடையில் விழுந்து இறந்தார். வில்லியனுார் அடுத்த ஒட்டம்பாளைத்தை சேர்ந்தவர் மாணிக்கம், 81. இவர், நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள வயல்களில் தனது மாடுகளை மேய்க்க சென்றார். மாலை வரை வீட்டுக்கு வராததால், சந்தேகமடைந்த அவரது மகன் வெங்கடேசன் அப்பகுதிக்கு பார்க்க சென்றார். அப்போது, மாடுகள் மட்டும் வயலில் மேயந்து கொண்டிருந்தன. அங்கு தேடிபார்த்த போது, மாணிக்கம் ஓடையில், மிதந்தவாறு இறந்து கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி