உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சம்பள உயர்வு கேட்டு மின்சார பஸ் ஊழியர்கள் போராட்டம்

சம்பள உயர்வு கேட்டு மின்சார பஸ் ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி: மின்சார பஸ்கள் ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பில், தனியார் பங்களிப்புடன் ரூ. 23 கோடி மதிப்பில் 25 மின்சார பஸ்கள் வாங்கி, இயங்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களை கடந்த 27ம் தேதி கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.75க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிகின்றனர். ஊழியர்களை பணியில் சேர்க்கும் போது, மாதம் ரூ. 21 ஆயிரத்து 500 சம்பளம் வழங்கப்படும், 4 நாட்கள் விடுமுறை எடுத்து கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது பிடித்தம் போக ரூ. 17 ஆயிரத்து 500 மட்டுமே வழங்கப்படும். விடுமுறை கிடையாது என,நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு 10 நாட்களே ஆன நிலையில், ஊதிய உயர்வு வழங்ககோரி ஊழியர்கள் நேற்று பஸ்களை தாவரவியல் பூங்கா எதிரே உள்ள பணிமனையில் நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, பிடித்தம் போக ரூ. 20 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். தினப்படி வழங்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். தகவலறிந்த தனியார் நிறுவன அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கோரிக்கைகள் குறித்து மேல் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, அதிகாலை 4:00 மணி முதல் இயக்கப்படும் மின்சார பஸ்கள், போராட்டம் காரணமாக காலை 11:30 மணிக்கு மேல் இயங்கியது. இதனால், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை