உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் கம்பங்களில் கம்பி வடங்களை அகற்ற மின்துறை அறிவுறுத்தல்

மின் கம்பங்களில் கம்பி வடங்களை அகற்ற மின்துறை அறிவுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரியில் முறையான அனுமதி பெறாமல் மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள தொலைக்காட்சி மற்றும் இன்டர்நெட் கம்பி வடங்களை அகற்ற,நகரஇயக்குதல் மற்றும் பராமரிப்பு மின்துறை செயற்பொறியாளர் அறிவுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:புதுச்சேரி மின்துறைக்கு உரிமையான மின் கம்பங்கள் மற்றும் தெருவிளக்கு மின்கம்பங்களில், தொலைக்காட்சி மற்றும் இன்டர்நெட் இணைப்பு கம்பி வடங்களை அமைத்து உபயோகப்படுத்த, மின்துறை அனுமதி பெறும் நடைமுறையும்,கட்டண விவரங்களும், தொழில்துறை வளர்ச்சி மற்றும் மின்சாரத்துறை வரையறுத்து, அரசாணை வெளியிட்டுள்ளது.ஆனால் முறையான அனுமதி பெறாமல், நகர பகுதி கோட்டத்திற்கு உட்பட்ட மின் கம்பங்களில், தொலைக்காட்சி மற்றும் இன்டர்நெட் கம்பி வடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒரு மாத காலத்திற்குள் முறையான அனுமதி இல்லாமல், கட்டப்பட்டிருக்கும் தொலைக்காட்சி மற்றும் இன்டர்நெட் கம்பி வடங்களை அகற்ற சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.தவறும் பட்சத்தில் மறு அறிவிப்பின்றி, கம்பி வடங்களை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதனால் ஏற்படும் சேவை பாதிப்புகளுக்கு மின்துறை பொறுப்பேற்காது.மேலும், மின்துறைக்கு சொந்தமான மின் இணைப்பு பெட்டிகள், மின்கம்பங்கள் உள்ளிட்ட மின் கட்டமைப்புகளின் மீது விளம்பர தட்டிகள் பொருத்துவதும், துண்டறிக்கை ஒட்டுவதும் மின்சார சட்ட விதிகளின் படி, தண்டனைக்குரிய குற்றமாகும். அதனால்மின் கட்டமைப்புகளின் மீது விளம்பர தட்டி பொருத்துதல், துண்டறிக்கை ஒட்டுதல் போன்றவதற்றை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை