உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சோரப்பட்டு பாரதி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

சோரப்பட்டு பாரதி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

திருபுவனை, : புதுச்சேரி சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு தலைமையாசிரியர் சுசீலா சம்பத் தலைமை தாங்கினார். மாணவ, மாணவியர் பாரம்பரிய உடையணிந்து, புதுப்பானையில் பொங்கலிட்டு, சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.மாணவ, மாணவியருக்கு உரியடித்தல், கயிறு இழுத்தல், சிலம்பம் உட்பட பல போட்டிகள் நடந்தது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் விஜயகுமார், நவீன்ராஜ், கவிதா, நிர்மலா மற்றும் உடல்கல்வி ஆசிரியர் விஷ்வா ஆகியோர் செய்திருந்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியை முத்தமிழ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ