உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மதுபான கடை லைசன்ஸ்  புதுப்பிக்க கலால் துறை அறிவிப்பு 

மதுபான கடை லைசன்ஸ்  புதுப்பிக்க கலால் துறை அறிவிப்பு 

புதுச்சேரி : மதுபான கடைகளுக்கான லைசன்ஸ் ஆண்டு கட்டணம் செலுத்து புதுப்பிக்க கலால் துறை அறிவித்துள்ளது.புதுச்சேரியில் 450க்கும் அதிகமான மதுபான கடைகள் உள்ளது. மதுபான கடைக்கான லைசன்ஸ் ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும்.அதன்படி, மதுபான கடைகளுக்கு ஆன்லைன் மூலம் புதுப்பிப்பு கட்டணம் இணையதளத்தில் செலுத்த பதிவு செய்ய கலால் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.அதன்படி, மொத்த மதுபான விற்பனை உரிமத்திற்கு, ரூ. 15 லட்சமும், மொத்த மதுபான விற்பனை உரிமதாரர், சில்லரை மது விற்பனை செய்வதிற்கான கூடுதல் உரிமதொகை ரூ. 7 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுபான சேமிப்பு கிடங்கிற்கு ரூ. 10 ஆயிரமும், பார் வசதியுடன் கூடிய சில்லரை மதுபான விற்பனை உரிமத்திற்கு ரூ. 10 லட்சம், பார் வசதி இல்லாத மதுபான விற்பனை உரிமத்திற்கு ரூ. 7 லட்சம், சில்லரை விற்பனைக்கு அனுமதிஇல்லாத சுற்றுலா பிரிவின் கீழ் ஓட்டல் , ரெஸ்டாரண்ட்களில் மட்டும் மதுபான வழங்கும் உரிமம் கொண்டவர்களுக்கு ரூ. 6 லட்சமும், பப், பீர் உரிமம் வசதி உள்ளவர்களுக்கு கூடுதல் உரிம தொகை ரூ. 5000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த 2022-23ம் ஆண்டிற்கான விற்பனை வரி பாக்கி ஏதும் இல்லை என்ற வணிக வரித்துறையின் சான்றிதழ், ஜி.எஸ்.டி. பதிவு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இணைத்து பதிவிடவும் கலால் துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை