உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மத்திய  அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

 மத்திய  அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருபுவனை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், திருவாண்டார்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் விநாயகம் தலைமை தாங்கினார். கொம்யூன் தலைவர் ரமேஷ், பொருளாளர் மாரியப்பன், நிர்வாகிகள் சுந்தர் பாலசுந்தர், பூபாலன் சாமிக்கண்ணு முன்னிலை வகித்தனர். சங்க மாநில செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநில பொருளாளர் தட்சணமூர்த்திமூர்த்தி, மாநில செயலாளர் சங்கர், பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில செயலாளர் அன்புமணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். புதுச்சேரி அரசு விவசாய தொழிலாளர்களை பாதுகாக்க நல வாரியம் அமைக்க வேண்டும். 100 நாள் வேலையை உடனடியாக துவக்க வேண்டும். சட்டக் கூலியாக ரூ.600 உயர்த்தி வழங்க வேண்டும். ஊரக வேலை சட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை தொடர வேண்டும் என, தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அதுபோல் புதுச்சேரி சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. கமிட்டி உறுப்பினர் கந்த நாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை