உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீட்டுமனை பட்டா கேட்டு உண்ணாவிரதம்

வீட்டுமனை பட்டா கேட்டு உண்ணாவிரதம்

புதுச்சேரி : புதுச்சேரியில் வீடு இல்லாதவர்கள், மனைப்பட்டா கேட்டு நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுசாரம், அவ்வை திடலில், வீட்டு மனைப்பட்டா கேட்டு, லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த வீடு இல்லாதவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மூத்த கம்யூ., தலைவர் முருகன் துவக்கி வைத்தார். செண்பக விநாயகர் கோவில் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் வாசு தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், லாஸ்பேட்டை, செண்பக விநாயகர் கோவில் தெருவில், 29 கூலி தொழிலாளர் குடும்பங்கள்,கடந்த 40 ஆண்டுகளாக, வசித்து வருகிறோம். அந்த இடத்திற்கு பட்டா கேட்டு கடந்த 15 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இது குறித்து பல கலெக்டர்களிடம் மனு அளித்தும் பலனில்லை. அதனால், குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருந்து எங்கள் நிலையை, ஆட்சியாளர்களுக்கு புரிய வைக்கிறோம். அங்கு வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் புதுச்சேரி அரசு மனைப்பட்டா வழங்க வேண்டும் என, கூறினர். உண்ணாவிரத போராட்டத்தை, மாலை 6:00 மணிக்கு, மா.கம்யூ., மாநில செயலாளர் ராஜாங்கம் முடித்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி