உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகன் இறந்த சோகத்தில் ரயிலில் பாய்ந்து தந்தை தற்கொலை மகன் இறந்த சோகத்தில் விபரீதம்

மகன் இறந்த சோகத்தில் ரயிலில் பாய்ந்து தந்தை தற்கொலை மகன் இறந்த சோகத்தில் விபரீதம்

வில்லியனுார்: வில்லியனுார் அருகே மகன் இறந்த சோகத்தில், தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.வில்லியனுார் அடுத்த உளவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ், 65; கூலித்தொழிலாளி. இவருக்கு ஒரு மகள், ஒரு மகன். கடந்த சில வருடத்திற்கு முன் மகன் திடீர் உடல்நல குறைவால் இறந்தார். மகன் இறந்த துக்கம் தாங்காமல் அன்று முதல் புஷ்பராஜ் குடிக்க துவங்கினார்.இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. நேற்று முன்தினம் வாழ பிடிக்கவில்லை; என் மகன் இருக்கும் இடத்திற்கே சென்று விடுகிறேன் என, மனைவியிடம் சண்டையிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார்.குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இதற்கிடையில் மாலை 6:30 மணியளவில் பண்டியன் நகர் பகுதியில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வந்த பயணியர் ரயல் முன் பாய்ந்து புஷ்பராஜ் தற்கொலை செய்துகொண்டார்.அவரது மனைவி நீலாவதி புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி