உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ரூ.4.94 கோடி மோசடி மகன் மீது தந்தை புகார்

 ரூ.4.94 கோடி மோசடி மகன் மீது தந்தை புகார்

புதுச்சேரி: டில்லியில் இடம் வாங்கியதில், 4.94 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக, மகன் மீது தந்தை சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்துள்ளார். பு துச்சேரி, மேட்டுப்பாளையம் பிப்டிக் தொழிற்பேட்டையில், வெல்கார்டு கம்போனண்ட்ஸ் என்ற நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக பிரசன்னா பூட்டோரியா, 60, உள்ளார். இவரது மகன் ரங்கிட் பூட்டோரியா, அதே நிறுவனத்தில் இயக்குநராக உள்ளதுடன், டில்லியில் வசிக்கிறார். கடந்த டிச., 18ல், டில்லி நொய்டாவில், வெல்கார்டு கம்போனண்ட்ஸ் நிறுவனம் பெயரில் சொத்து வாங்க, பிரசன்னா தன் மகனுக்கு பல்வேறு தவணைகளாக 4 கோடியே 94 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார். ஆனால், அந்த பணத்தில், நிறுவனம் பெயரில் சொத்து பதிவு செய்யாமல், அவரது பெயரில் மோசடியாக பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதையறிந்த பிரசன்னா பூட்டோரியா, நிறுவனத்தின் பணத்தில் மோசடியாக சொத்து வாங்கியதாக, மகன் மீது புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி., போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை