உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ட்ரோன் மூலம் உரம் தெளிப்பு

ட்ரோன் மூலம் உரம் தெளிப்பு

நெட்டப்பாக்கம் : கரையாம்புத்துார் உழவர் உதவியகம் சார்பில், ட்ரோன் மூலம் நானோ யூரியா உரம் தெளிக்கும் செயல்விளக்கம் நிகழ்ச்சி கடுவனுார் கிராமத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, வேளாண் அலுவலர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். உதவி வேளாண் அலுவலர் கங்காதுரை முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ட்ரோன் மூலம் விவசாயிகள் நெற்பயிர்களில் எவ்வாறு நானோ யூரியா உரம் தெளிப்பது என்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். தொடர்ந்து இலவசமாக மருந்து தெளிக்கும் பணி நடந்தது. இதன் மூலம் விவசாயிகளுக்கு நேரம் மற்றும் பணம் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தவச்சலம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி