அரசு அலுவலகத்தில் கோப்புகள் மாயம்
பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அரசு கோப்புகளை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, லே பேர்தீன் வீதியில் பொதுப்பணித்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய நெடுஞ்சாலை பிரிவில் இருந்த ஊழியர்களின் 15 எண் கொண்ட சேவை புத்தகங்கள் மற்றும் சில கோப்புகள் மாயமாகியுள்ளன.இதுகுறித்து, பிரிவின் இளநிலை கணக்கு அலுவலர் கருணாகரன் அளித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் அரசு அலுவலகத்தில் கோப்புகளை திருடிய மர்ம நபர்கள் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.