மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
21 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
21 hour(s) ago
தமிழகம்,புதுச்சேரி 40 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கியது.முகூர்த்த நாளாக இருந்தாலும் முதல்நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 21ம் தேதி கூத்தன் என்ற சுயேச்சை வேட்பாளர் மனுதாக்கல் செய்தார். 22ம் தேதி யாரும்வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 23, 24ம் தேதி விடுமுறை நாட்கள் என்பதால் மனு தாக்கல் பெறப்படவில்லை.25ம் தேதி மிகவும் நல்லநாள் என்பதால் அன்றைய தினம் பா.ஜ., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி உட்பட மொத்தம் 8 வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். 26ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்,7 சுயேட்சைகள் என ஒரே நாளில் மொத்தம் 8 பேர் மனுதாக்கல் செய்தனர். 20 ம்தேதி முதல் கடந்த ஆறு நாட்களில் 17 பேர்களின் 24 மனுக்கள் பெறப்பட்டது. இறுதி நாளான நேற்றும்வேட்பு மனு தாக்கல் களைகட்டியது.வேட்பாளர்கள் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து ஆர்வமாக மனு தாக்கல் செய்தனர். காங்.,வேட்பாளர்
வேட்பு மனுதாக்கலையொட்டி காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம் சித்தி விநாயகர், மணக்குள விநாயகர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பங்கேற்றார்.தொடர்ந்து 9.45 மணியளவில் சாரத்திலிருந்து கூட்டணி கட்சிகளுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றார்.இந்த பேரணியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தி.மு.க., சார்பில் மாநில அமைப்பாளர் சிவா, இந்திய. கம்யூ., சலீம், மா.கம்யூ.,மாநில செயலர் ராஜாங்கம்,உள்பட அனைத்து கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த ஊர்வலத்தால் காமராஜர் சாலை,வழுதாவூர் சாலை,கோரிமேடு சாலை, ராஜிவ் சிக்னல்,நகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கலெக்டர் அலுவலகத்திற்குமுன்பாக 100 மீட்டர் தொலைவில்ஊர்வலம் தடுத்து நிறுத்தப்பட்டது.வேட்பு மனு செய்யும்காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம்,முன்மொழிவு செய்யும் கூட்டணி கட்சி தலைவர்கள்,முக்கிய நிர்வாகிகள் மட்டும் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.தொடர்ந்து 11:00மணியளவில் மாவட்ட தேர்தல் அதிகாரியான குலோத்துங்கனிடம் காங்.,வேட்பாளர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.காங்.,வேட்பாளர் மட்டுமின்றி மேலும் 16 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.நேற்று ஒரே நாளில் 17 பேர், 21 வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததால் மாவட்ட தேர்தல் அலுவலகம் பரபரப்பாககாணப்பட்டது.புதுச்சேரி லோக்சபா தேர்தலில் போட்டியிட இதுவரை 34 வேட்பாளர்களின் 45 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்த வேட்பு மனுக்கள் மீது இன்று 28 ம்தேதி பரிசீலனை நடக்கின்றது.வேட்பு மனுக்களை திரும்ப பெற 30 ம்தேதி மாலை 3:00 மணிக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம்.அன்றைய தினமே மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகின்றது.அப்போது சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளன. ஒரே சின்னத்தை 2 சுயேட்சைகள் கேட்கும்பட்சத்தில் குலுக்கல் முறையில் அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளது.
21 hour(s) ago
21 hour(s) ago