உள்ளூர் செய்திகள்

மீனவர் தற்கொலை

அரியாங்குப்பம்: வீராம்பட்டிணம் ஜீவரத்தினம் வீதியை சேர்ந்தவர் சிற்றரசு,47; மீனவரான இவர், மது குடிப்பதை அவரது மனைவி வீரலட்சுமி கண்டித்தார். இதுதொடர்பாக தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.அதில் மனமுடைந்த சிற்றரசு தற்கொலை செய்து கொள்ள சில தினங்களுக்கு முன் எலி பேஸ்ட் சாப்பிட்டார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து வீடு திரும்பிய சிற்றரசு நேற்று வீராம்பட்டிணம் கடற்கரை பகுதியில் உள்ள மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்