உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போலி மருந்து விவகாரத்தில் அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு முன்னாள் முதல்வர் அறிக்கை

 போலி மருந்து விவகாரத்தில் அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு முன்னாள் முதல்வர் அறிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்துள்ள போலி மருந்து விவகாரத்தில் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் ராஜா (எ) வள்ளியப்பன் போலி மருந்து தயாரித்து சுமார் ரூ. 10 ஆயிரம் கோடி அளவிற்கு கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, உத்திரபிரதேசம், டில்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்களுக்கு விற்றுள்ளார். இதனை கண்டித்து காங்., சார்பில், தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். மேலும், இந்த போலி மருந்து விவகாரத்தில் பல மாநிலங்கள் சம்மந்தப்பட்டுள்ளதால் சி.பி.ஐ., விசாரணை கோரி கவர்னரை சந்தித்து மனு அளித்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. கு டோன்களில் பறிமுதல் செய்த போலி மருந்துகளும், ராஜா வீட்டில் பறிமுதல் செய்த ஆவணங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது இதில் பல முக்கிய அரசியல் புள்ளிகள் சம்மந்தப்பட்டுள்ளனர். அதனால் தான் இப்பிரச்னையை டில்லி அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக டில்லி ஜந்தர் மந்திரில் புதுச்சேரி காங்., சார்பில் போராட்டம் நடத்தினோம். இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றும் வரை ஓய மாட்டோம். மக்களின் உயிரோடு விளையாடக்கூடிய வேலை இது. இதற்கு பிரதமர் மோடி பதில் கூற வேண்டும். பிரதமர் மோடி நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்காது, என்றார். ஆனால் அவர்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதுச்சேரியில் பெரிய இமாலய ஊழல் போலி மருந்து கம்பெனி மூலமாக நடைபெற்றிருக்கிறது. இதற்கு பிரதமர் மோடி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், நீதிமன்றம் செல்வோம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை