உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதல்வர் டில்லி செல்லாமல் மாநில அந்தஸ்து பெற முடியாது

முதல்வர் டில்லி செல்லாமல் மாநில அந்தஸ்து பெற முடியாது

புதுச்சேரி : முதல்வர் டில்லி செல்லாமல் மாநில அந்தஸ்து பெற முடியாது என முன்னாள் எம்.பி., ராமதாஸ் என கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மாநில அந்தஸ்து பெறுவதில் உண்மையில் முதல்வருக்கு நாட்டம் உள்ளதாக தெரியவில்லை. அதனால் தான் மாநில அந்தஸ்து கிடைக்கும் வரையில் மத்திய அரசிடம் தொடர்ந்து கேட்போம் என்று கூறுகிறார்.இவர் தொடர்ந்து கேட்பதே இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். எப்போது கவர்னரோடு, அதிகாரிகளோடு கருத்து வேறுபாடு வருகிறதோ அப்போது எனக்கு மனக்கவலையாக இருக்கிறது, மாநில அந்தஸ்து கிடைத்தால் தான் எல்லாம் சரியாகும் என்று சொல்வார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் இவர் எத்தனை முறை டில்லிக்கு சென்றுள்ளார். பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் சந்தித்து மாநில அந்தஸ்து குறித்து வலியுறுத்தி உள்ளார். ஒரு தடவைகூட கிடையாது. போர்க்கால நடவடிக்கை எடுத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் கூட பார்லிமெண்ட் தேர்தலுக்கு முன் நாம் மாநில அந்தஸ்தைப் பெற முடியும். ஆனால் இதைப் பெறுவதற்கு மனதில் பயமில்லாத, சுதந்திர வேட்கை உள்ள, நேர்மையான, துடிப்புள்ள, இந்த மண்ணின் மீது அக்கறை உள்ள ஒரு முதல்வர் தேவை. அதுவரை மாநில அந்தஸ்து கோரிக்கை நிறைவேறாத கனவாகவே இருக்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ