உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி மாஜி முதல்வர் ராமச்சந்திரன் மரணம்

புதுச்சேரி மாஜி முதல்வர் ராமச்சந்திரன் மரணம்

புதுச்சேரி : புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன், 93. உடல் நலம் பாதித்த அவர், ஆழ்வார்பேட்டையில் காவேரி மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரமாக அனுமதிக்கப்பட்டு இருந்தார். நேற்றிரவு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் நம்பிக்கை பெற்ற ராமச்சந்திரன், புதுச்சேரியில் கடந்த 1980 முதல் 1983 வரையும், 1990 முதல் 1991 வரையும் இரண்டு முறை தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்தார். கடந்த 2001ம் ஆண்டு முதல் 2006 வரை சபாநாயகர்; 1985ம் ஆண்டு முதல் 1985 வரை எதிர்க்கட்சி தலைவர் பதவி வகித்தார். கடந்த 1969ல் தி.மு.க., மூலம் அரசியல் பயணத்தை துவக்கிய அவர், அந்தாண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று 1969ம் ஆண்டு முதல் 1979 வரை பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தார். தொடர்ந்து அ.தி.மு.க.வில் இணைந்து, 1974 முதல் 1977 வரை சமூக நலத் துறை அமைச்சராகவும், 1977 முதல் 1980 வரை உள்துறை அமைச்சராக இருந்தார். கடைசியில் காங்., கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார்.ராமச்சந்திரன், கடந்த 31.01.1931ல் பிறந்தார். சென்னை லயோலா கல்லுாரியில் பி.ஏ., படித்துள்ளார். அவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், கோமதி, யசோதா என்ற இரு மகள்களும் உள்ளனர்.அவரது உடல் சொந்த ஊரான மடுகரை ரெட்டியார் வீதியில் இன்று பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மாலை 4:00 மணியளவில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. அவரது மறைவினையொட்டி கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா, புதுச்சேரி காங்., தலைவர் வைத்திலிங்கம் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை