உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெயிண்டரை தாக்கிய நான்கு பேர் கைது

பெயிண்டரை தாக்கிய நான்கு பேர் கைது

காரைக்கால் : காரைக்காலில் முன்விரோதம் காரணமாக பெயிண் டரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.திட்டச்சேரி ஆலத்துார் ஒத்த வீடு தெருவை சேர்ந்த முனுசாமி மகன் ஹரிஹரன், 20, என்பவர் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார்.இவர் காரைக்கால் நிரவி காக்காமொழி பகுதியில் உள்ள சாராயக்கடைக்கு நேற்று முன்தினம் தனது தம்பி அஜயை தேடி சென்றபோது மது அருந்திய சிலர், முன்விரோதம் காரணமாக ஹரிஹரனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயம் அடைந்த ஹரி ஹரன் அரசு மருந்துவமனை யில் சிகிச்சை பெற்றார்.அவர் அளித்த புகாரின் பேரில், அதே பகுதியை சேர்ந்த பசுபதிராஜ், 25, ஹரிஹரன் 20, ஜெயகாந்த், 18, ஹமீது, 20, ஆகிய நான்கு பேர் மீது நிரவி போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை