உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இன்ஜினியரிடம் ரூ.19 லட்சம் மோசடி

இன்ஜினியரிடம் ரூ.19 லட்சம் மோசடி

புதுச்சேரி : போலீஸ் போல் நடித்து இன்ஜினியர் பெயரில் ரூ. 19 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்தவர் நல்லா நாக சதீஷ் பாபுஜி. இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினிய ராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்கள் முன்பு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர், மும்பை போதை பொருட்கள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசில் இருந்து பேசுவதாக தெரிவித்தார்.அப்போது நல்லா நாக சதீஷ் பாபுஜி பெயரில் மும்பையில் இருந்து ஈரானுக்கு போதை பொருட்கள், லேப்டாப், பாஸ்போர்ட் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்தனர். இதேபோல் அவர் கிரிடிட் கார்டு மூலமாக தடை செய்யப்பட்ட பொருட்களை வாங்கியதாக குற்றம் சாட்டினர்.இதுபற்றி விசாரிக்க அவரின் வங்கி விவரங்களை கேட்டு பெற்றனர். அதன்பின் அவற்றை வைத்து மோசடி கும்பல் வங்கியில் ரூ.19 லட்சத்து 94 ஆயிரத்து 101 தனிநபர் கடன் பெற்றனர். இதனை அறிந்து நல்லா நாக சதீஷ் பாபுஜி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை