உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

புதுச்சேரி : லாஸ்பேட்டையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.நாதன் அறக்கட்டளை மற்றும் பிம்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமை, அறக்கட்டளை நிறுவனர் முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் துவக்கி வைத்தார். பிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சுரேஷ்கிருஷ்ணா, வினிதா மற்றும் கிலாடிஸ் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நோயாளிகளை பரிசோதித்து, சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர்.இதில் நீரழிவு நோய்க்கான சிகிச்சை, கண் பரிசோதனை, இ.சி.ஜி., எலும்பு, பல் மற்றும் பொது மருத்துவத்திற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.முகாமில், அறக்கட்டளை நிர்வாகிகள் வேலு, வெங்கடேசன், சுப்ரமணி, ஆறுமுகம், கங்கைஅமரன், சங்கர், சத்தியமூர்த்தி, கண்ணன், சந்துரு, வழக்கறிஞர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ