மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
10 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
10 hour(s) ago
புதுச்சேரி: உலக நுகர்வோர் தினத்தையொட்டி, இந்தியன் வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.உலக நுகர்வோர் தினத்தையொட்டி, வள்ளலார் சாலையில் உள்ள இந்தியன் வங்கி கிளை சார்பில், வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.இலவச பரிசோதனை முகாமை, இந்தியன் வங்கி மேலாளர் குஞ்சன்திவாரி, சிறு மற்றும் குறு தொழில் வங்கி மேலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.டாக்டர் மோகன் பரிசோதனை செய்தார். வங்கிக்கு வந்த நுாற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பரிசோதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், வங்கி ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
10 hour(s) ago
10 hour(s) ago