இலவச அரிசி வழங்கல்
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் பகுதியில் பாஸ்கர் எம்.எல்.ஏ., இலவச அரிசி வழங்கினார்.புதுச்சேரியில் அரசு அறிவித்தபடி, குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம், புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும், அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட, தேங்காய்த்திட்டு, ஆர்.கே., நகர், வீராம்பட்டினம் உள்ளிட்ட பகுதியில், நேற்று இலவச அரிசி வழங்கப்பட்டது.பாஸ்கர் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு, அந்தந்த ரேஷன் கடைகளில், பொது மக்களுக்கு இலவச அரிசியை பொதுமக்களிடம் வழங்கினார்.