ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் கருட சேவை
புதுச்சேரி : முத்தியால்பேட்டை ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், 54ம் ஆண்டு திருபவித்ர உற்சவத்தை முன்னிட்டு கருட சேவை நடந்தது.முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில், ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 54ம் ஆண்டு திருபவித்ர உற்சவம் கடந்த 7ம் தேதி துவங்கியது. அன்று மூலவர், உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.தொடர்ந்து, 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை தினமும் 92 திருவாராதனம் நடந்தது. நேற்று காலை கருடசேவை, அவப்ருதம், பூர்ணாஹூதி, சாத்து முறை, பவித்ர உற்சவ பூர்த்தி நடந்தது.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.