உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்களுக்கு பரிசளிப்பு

மாணவர்களுக்கு பரிசளிப்பு

நெட்டப்பாக்கம் : பனை விதை நடவு செய்த ஏம்பலம் மறைமலையடிகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.ஏம்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாரண சாரணியர் சிறப்பு முகாம் நடந்தது. பள்ளி துணை முதல்வர் லதா தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் ஜானகிராமன் வரவேற்றார். சாரண ஆசிரியர்கள் அய்யப்பன், மதியழகன், மனோகர் ஆகியோர் சாரணர் இயக்கத்தின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கினர். சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி போக்குவரத்துக் கழக பண்டகக் காப்பாளர் சண்முகம், புதுக்குப்பம் பிரசாத் ஆகியோர் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில், ஆயிரம் பனை விதைகள் நடவு செய்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.ஏற்பாடுகளை சாரண ஆசிரியர் ஜானகிராமன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை