மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
4 hour(s) ago
புதுச்சேரி : சிறமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த ரவுடிக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, புதுச்சேரி போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.புதுச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி வீட்டிலிருந்து மாயமானார். அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார், கடத்தல் பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில் 4 நாள் கழித்து சிறுமி வீடு திரும்பினார். அவரை விசாரித்ததில், அரியாங்குப்பம் ராம்சிங் நகர், சிங்கராவேலு மகன் ரவுடி ராஜ் (எ) ரமணா,27; சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வில்லியனுார் உத்திரவாகிணிபேட் பகுதியில் உள்ள நண்பரின் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு குழு விசாரணை நடத்தி, சீனியர் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தது. அதன்பேரில், அரியாங்குப்பம் போலீசார் கடத்தல் வழக்கை சிறார் பாலியல் பலாத்கார வழக்காக மாற்றி ரவுடி ரமணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும், அவர் மீது புதுச்சேரி போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சோபனா தேவி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட ராஜ் (எ) ரமணாவுக்கு போக்சோ பிரிவில் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை, சிறுமி கடத்தலுக்கு 3 ஆண்டு கடுங்காவல், சட்டவிரோதமாக அடைத்து வைத்ததற்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.4,000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.சிறை தண்டனை விதிக்கப்பட்ட ரவுடி ரமணா மீது கொலை, திருட்டு மற்றும் போக்சோ வழக்கில் சாட்சியை தாக்கிய வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago