கண்ணாடி உடைப்பு வாலிபருக்கு வலை
புதுச்சேரி : மாகி அருகே உள்ள பள்ளூரில் சமுதாய நலவழி மையம் இயங்கி வருகிறது. அங்கு மருத்துவ அதிகாரியாக பூஜா பணியில் இருந்தார். நேற்று முன்தினம், கேரளா மாநிலம், கதிரூர் நல்லச்சேரிமுக்கை பகுதியை சேர்ந்தவர் ஜோஜோ, இவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தார். திடீரென அவர் மருத்துவமனை ஊழியர்களை தாக்கி, அங்கு இருந்த கண்ணாடியை உடைத்து விட்டு, அங்கிருந்து தப்பி யோடினார். இதுகுறித்து, பள்ளூர் போலீசார் வழக்கு, ஜோஜோவை தேடிவருகின்றனர்.