மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
புதுச்சேரி: மழலையர் கலை விழாவில் 22 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.புதுச்சேரி கல்வித் துறை சார்பில் அரசு துவக்க பள்ளி மாணவர்களுக்கான மழலையர் கலை விழா தட்டாஞ்சாவடி அரசு துவக்கப் பள்ளியில் நடந்தது. இவ்விழாவில் பள்ளி கல்வி வட்டம்-1 சார்பாக 22 பள்ளிகளில் இருந்து 420 மாணவர்கள் பங்கு பெற்றனர்.இந்த விழாவில் 16 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவிற்கும் மூன்று பரிசுகள் வீதம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.விழாவிற்கு வட்டம்-1 பள்ளி துணை ஆய்வாளர் குலசேகரன் தலைமை தாங்கினார்.விழாவில், முன் மழலையர் முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுகக்கு மாறுவேடம்,வண்ணம் தீட்டுதல், ஓவியம், குழு நடனம், வினாடி வினா, நாடகம் உள்ளிட்ட போட்டி நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்கள் மண்டல அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.பள்ளி தலைமையாசிரியை கீதா ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். பள்ளி தலைமையாசிரியர்கள் பரமேஸ்வரி,ராமதாஸ், இளங்கோவன், கமலாதேவி, துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago