உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாராய கடத்தல் வாகனத்தில் அரசு வாகனத்தின் பதிவு எண்

சாராய கடத்தல் வாகனத்தில் அரசு வாகனத்தின் பதிவு எண்

புதுச்சேரி சாராயம், மதுபானங்களை தமிழகத்திற்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை. ஆனால், குறைந்த விலை மதுபானங்களை வாங்கி சென்று தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். அதுபோல், சாராயமும் வாங்கி சென்று தமிழகத்தில் பாக்கெட்டுகளில் விற்பனை செய்கின்றனர்.இப்படி மதுபானம் கடத்தி செல்லும்போது, போலீசாரிடம் சிக்கினால் சாராயம் கடத்தி செல்லும் வாகனத்தை நடுவழியில் நிறுத்திவிட்டுதப்பி சென்று விடுகின்றனர். சமீபத்தில், காரைக்கால் எல்லையில் தமிழக போலீசாரிடம் சிக்கிய சாராய கடத்தல் வாகனத்தை சோதனை செய்தபோது, அந்த வாகனத்தின் பதிவு எண் புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையில் பழுதாகி நிற்கும் வாகனத்தின் பதிவு எண் என தெரியவந்தது.புதுச்சேரியில் அரசு துறைகளில் பழுதான ஏராளமான வாகனங்கள் ஸ்கிராப்க்கு அனுப்பாமல் துறை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த வாகனத்தின் பதிவு எண்ணை குறித்து செல்லும் மர்ம நபர்கள் அதை சாராய கடத்தும் வாகனத்திற்கு பயன்படுத்துகின்றனர்.அரசு துறைகளில் பழுதாகி நிற்கும் வாகனங்களின் வாகன பதிவை போக்குவரத்து துறையில் பதிவு சரண்டர் செய்தால், இதுபோன்ற பிரச்னை ஏற்படாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை