உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரயில் போக்குவரத்து வசதியை விரிவுபடுத்த கவர்னர் கடிதம்

ரயில் போக்குவரத்து வசதியை விரிவுபடுத்த கவர்னர் கடிதம்

புதுச்சேரி : புதுச்சேரி - விழுப்புரம் இடையிலான ரயில் போக்குவரத்து வசதியை விரிவு படுத்துவது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிக்கு கவர்னர் தமிழிசை கடிதம் எழுதியுள்ளார்.அதில்,புதுச்சேரி - விழுப்புரம் இடையே ரயில் பாதையை இரட்டிப்பு ஆக்குவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்ய வேண்டும். தற்போதைய ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களை இரட்டிப்பு ஆக்க வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டிருக்கிறது.முதல் கட்டமாக, புதுச்சேரி - விழுப்புரம் இடையே உள்ள ரயில்களின் புறப்படும் நேரத்தை 15 நிமிட இடைவெளியில் மாற்றி அமைக்க வேண்டும். இது புதுச்சேரி - விழுப்புரம் மற்றும் நீண்ட துார ரயில் போக்குவரத்திற்கும் வழித்தடம் ஏற்படுத்தி தர உதவும்.நீண்டகால திட்டமாக இங்குள்ள கிராமங்கள், நகரங்கள், தொழிற்பேட்டைகள், கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் ஆகியவற்றை இணைக்கும்படி நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவை திட்டத்தை பரிசீலிக்கலாம்.தற்போது உள்ள குடியிருப்பு பகுதிகளை பாதிக்காத வகையில் ரயில் நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும். 'டெர்மினல் கோச்சிங்' வசதிகளை புதுச்சேரியில் மேம்படுத்த வேண்டும். இந்த திட்டம் கடந்த 2008--09ம் ஆண்டில் முன்வைக்கப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது.அன்றைய காலகட்டத்தில் புதிய இட வசதி இல்லாத காரணத்தால் அது கிடப்பில் போடப்பட்டது. எனவே, எந்த ஒரு தடையும் இல்லாத சூழ்நிலையில் புதுச்சேரியில் டெர்மினல் கோச்சிங் வசதியை மேம்படுத்துவதற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான முன்மொழிவு மற்றும் வழிகாட்டுதலை வழங்கி, வரும் நிதி ஆண்டில் அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை