மேலும் செய்திகள்
லாட்டரி விற்றவர் கைது
10-Dec-2024
பாகூர்: பாகூர் அடுத்த சோரியாங்குப்பத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் சென்றது. இதையடுத்து, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் பாகூர் போலீசார் நேற்று முன்தினம் சோரியாங்குப்பத்தில் உள்ள பெட்டிக் கடைகளில் சோதனை நடத்தினர். அதில், மூன்று பெட்டிக் கடைகளில் இருந்து 136 ஹான்ஸ் பாக்கெட்டுகள், 30 கூல்லீப், 237 விமல் சாந்தி பாக்கு, 186 V - 1 பாக்கெட்டுகள், மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 10 ஆயிரம் ரூபாய்.இது குறித்த புகாரின் பேரில், சோரியாங்குப்பத்தை சேர்ந்த சபரீசன் 42; கோர்க்காடு அம்சவல்லி, 45; குருவிநத்தம் பழனியம்மாள், 42; ஆகியோர் மீது பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
10-Dec-2024