உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்கா கடத்தல் வாலிபர் கைது

குட்கா கடத்தல் வாலிபர் கைது

புதுச்சேரி : ஒதியஞ்சாலை போலீசார் நேற்று மதியம் 2:00 மணியளவில் புதுச்சேரி ரயில் நிலையத்தில், ஹவுராவில் இருந்து வந்த ரயிலில் சோதனை நடத்தினர். அதில் பயணி ஒருவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கொண்டு வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த இர்பன், 23, என்பதும், புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து போலீசார் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ