விநாயகரை கும்பிட்டால் அரை கிலோ சர்க்கரை காமராஜ் தொகுதியில் தடபுடல் ஏற்பாடு
தமிழகத்தின் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரி அரசியலில் கால்தடம் பதித்துவிட்டார். அவர் காமராஜ் தொகுதியில் நிற்பது உறுதியாகி விட்டது. தொகுதி எம்.எல்.ஏ.,வாக ஜான்குமார் முன்னின்று ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தேர்தலில் நிற்பதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகின்றார். ஓட்டு வேட்டைக்காக வீடு வீடாக மக்களிடம் 'பல்ஸ்' பார்க்கப்பட்டு வருகிறது. காமராஜ் நகர் தொகுதிக்கு என்ன தேவை, மக்களுக்கு என்ன தேவை என வீடு வீடாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. உங்க வீட்டிற்கு 'இன்வெர்ட்டர்' கொடுத்தால் சரியாக இருக்குமா, 'அக்வா வாட்டர் பியூரிபையர்' வேண்டுமா என, தொகுதி முழுவதும் சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அடுத்துதொகுதிகளில் உள்ள ஹிந்துகளின் ஓட்டுகளை கவரும் வகையில், தற்போது தடபுடல் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி,தொகுதியில் சந்து பொந்து உள்பட 25 இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்படுவதுடன், இங்கு விநாயகரை கும்பிடும் அனைவருக்கும் அரை கிலோ சர்க்கரை வழங்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அப்புறம் என்னங்க... காமராஜ் தொகுதியில் விநாயகரை கும்பிட்டால் உங்கள் கையில் அரை கிலோ சர்க்கரை....