உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கை நிறைய... மனம் நிறைய பரிசு... திக்குமுக்காடிய மகளிர்

 கை நிறைய... மனம் நிறைய பரிசு... திக்குமுக்காடிய மகளிர்

தினமலர் கோலப்போட்டியில் பங்கேற்கும் பெண்களுக்கு எப்போதும் பரிசுகளுக்கு பஞ்சம் இருக்காது. இந்த முறையும் கோலமிட்ட பெண்கள் அனைவருக்குமே திக்குமுக்காடும் அளவிற்கு பரிசுகள் வழங்கப்பட்டன.குறிப்பாக பெண்களுக்கு மனசு நிறையும் அளவிற்கு, நிறுவனங்கள், போட்டி போட்டுக்கொண்டு நான்கு பரிசு பைகளில் பரிசு தொகுப்பு பொருட்களாக வழங்கின. இதனால் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கோலமிட்ட பெண்கள் பரிசு மழையில் நனைந்தனர். பரிசு பை-1 தி சென்னை சில்க்ஸ் பரிசு பையில் அந்நிறுவனத்தின் அழகிய புடவை, தினமலர் நாளிதழ் மாத காலண்டர், ருசிபால் நிறுவனத்தின் நெய், ராம் தங்க மாளிகையின் தினசரி காலண்டர், தங்கம் குரூப் நிறுவனத்தின் தங்கம் நல்லெண்ணைய், காளிமார்க் ஜூஸ், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் வழங்கிய சில்வர் பாத்திரம், ஹாமாம் சோப் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. பரிசு பை-2 லட்சிய ஜனநாயக கட்சியின் பரிசு பையில் வெல்லம், அரிசி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பச்சை பயிறு, குண்டு உளுந்து, வருகடலை, கான்பிளேவர் மாவு, மிளகு, சீரகம், வெந்தயம், ஜவ்வரசி, பெருஞ்சீரகம், ரவை, மற்றும் கரி மாசலா பொருட்கள் வழங்கப்பட்டன. பரிசு பை-3 சத்யா ஏஜென்சி பரிசு பையில், பிளாஸ்டிக் கன்டெய்னர், குக்கூ நிறுவனத்தின் சிப்ஸ் பாக்கெட்கள், டெய்லி நீட்ஸ் சர்க்கரை, ஏ.வி.டி., நிறுவனத்தின் டீ துாள், கவுதம் ஜூவல்லரியின் தாலி, மஞ்சள் குங்குமம் வழங்கப்பட்டது. பரிசு பை-4 இளங்கோ-லட்சுமி பவுண்டேஷன் பரிசு பையில் 1,200 பேருக்கு, வெங்காயம், கத்திரிக்காய், உருளைகிழங்கு, கேரட், முள்ளங்கி, பீட்ரூட், முட்டைகோஸ், பீன்ஸ், சவ்சவ் உள்ளிட்ட 7 டன் காய்கறிகள் பரிசாக வழங்கப்பட்டன. என்ன பரிசு லிஸ்ட்டுகளை கேட்கும்போதே மூச்சு முட்டுதா... பரிசுகளை வாங்கிய பெண்களுக்கு அப்படி தான் இருந்தது. நிறுவனங்கள் கொடுக்க கொடுக்க வாங்கிக்கொண்டே இருந்தனர்.இதை வைத்து ஒரு மாதத்திற்கு குடும்ப பட்ஜெட்டின் செலவுகளை மிச்சப்படுத்தலாம் என, பெண்கள் மகிழ்ச்சியாக பகிர்ந்தனர்.மனம் நிறைந்த பரிசு பைகளை துாக்கி செல்ல முடியாமல், திக்குமுக்காடிய பெண்கள் தங்களது உறவினர்களை மொபைலில் அழைத்து, தினமலர் நாளிதழ்க்கு நன்றி தெரிவித்தப்படி மகிழ்ச்சியாக விடைப்பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ