உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் திடீர் சாவு

சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் திடீர் சாவு

புதுச்சேரி : நெஞ்சு வலிக்காக அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் திடீரென உயிரிழந்தார்.புதுச்சேரி ஒட்டம்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன், 45. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளார். வேல்முருகன் புக் பைண்டிங் வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு வேல்முருகனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரது மனைவி வேல்முருகனை அரசு மருத்துவமனையில் காண்பித்தார். அப்போது, இ.சி.ஜி. எடுத்து சாதாரண வலி தான் என கூறி, மாத்திரை கொடுத்து அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு திரும்பிய வேல்முருகனுக்கு மீண்டும் நெஞ்சுவலி அதிகாரித்தது. இரவு 1:00 மணிக்கு மீண்டும் ஆட்டோ மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து வேல்முருகன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ