உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காது கேட்கும் கருவி வழங்கல்

காது கேட்கும் கருவி வழங்கல்

புதுச்சேரி: அரசு பொதுமருத்துவனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவு சார்பில், பயனாளிகளுக்கு, விலையில்லா காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது. மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் கீழ் இயங்கும் ராஷ்டிரிய வயோ ஸ்ரீ யோஜனா மூலம், 14 பயனாளிகளுக்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்பீல், காது கேட்கும் கருவி, மாற்றுத் திறனாளிகளுக்கு, செயற்கை உறுப்பு மற்றும் எலும்பு மூட்டு ஆதரவு சாதனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, சுகாதாரத்துறை இயக்குநர் செல்வேல் தலைமை தாங்கி, உபகரணங்களை வழங்கினார். கிரிதரிநாயக் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், காது, மூக்கு, தொண்டை பிரிவு தலைமை மருத்துவ அதிகாரி ஸ்டாலின் சிவகுருநாதன் உட்பட டாக்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி