உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளி நேரங்களில் கனரக வானகங்களை அனுமதிக்க கூடாது; அரசு கொறடா

பள்ளி நேரங்களில் கனரக வானகங்களை அனுமதிக்க கூடாது; அரசு கொறடா

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில், அரசு கொறடா ஆறுமுகம் பேசியதாவது: புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில், விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்க வேண்டும். தீவனம் மற்றும் பராமரிப்பு செலவு அதிகரித்துள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைக்க நகர் மற்றும் கிராமப்புறங்களில் பள்ளி திறக்கும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்படும் நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது. போக்குவரத்து போலீசார் ஆவணங்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் தொந்தரவு செய்கின்றனர். இதனை சரிசெய்ய வேண்டும். வாரிசுதாரர்களுக்கு பொதுப்பணி துறையில் வேலை வழங்க வேண்டும். தட்டாஞ்சாவடியில் அமைந்துள்ள மார்க்கெட் கமிட்டியில், ஊழியர்கள் 24 ஆண்டுகளாக பணி புரிந்து வருகின்றனர். அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை