உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு உதவி மையம் துவக்கம்

 எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு உதவி மையம் துவக்கம்

புதுச்சேரி: புலம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு, உதவிட கலெக்டர் அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் குலோத்துங்கன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தேர்தல் ஆணைய வழிகாட்டுதலுக்கு இணங்க புதுச்சேரியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த4ம் தேதி முதல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி, பூர்த்தி செய்து திரும்ப பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் வசிக்கக்கூடிய பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த வாக்காளர்கள் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த சந்தேகங்களை போக்கிட, புதுச்சேரி, வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பிற மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்த வாக்காளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தங்களுக்குத் தேவையான தகவல்களை பெற்று பயனடையலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை