உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 10 உதவி பேராசிரியர்களை நீக்கிய உயர்கல்வி துறை கல்வி நிறுவனங்களில் பரபரப்பு

10 உதவி பேராசிரியர்களை நீக்கிய உயர்கல்வி துறை கல்வி நிறுவனங்களில் பரபரப்பு

புதுச்சேரி : புதுச்சேரி தாகூர் கலை அறிவியல் கல்லுாரியில் பணிபுரிந்த 10 உதவி பேராசிரியர்கள், உயர் கல்வி துறையின் உத்தரவின்பேரில் நீக்கப்பட்டுள்ளனர். கல்லுாரியில் பேராசிரியர் பற்றாக்குறை இருக்கும் நிலையில், இப்படி ஒரே அடியாக 10 பேரை நீக்கியது கல்வி நிறுவனங்கள் மத்தியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணம் என, பேராசிரியர்கள் கூறியதாவது; தாகூர் கலைக் கல்லுாரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. அந்த நேரத்தில் உயர்கல்வி துறையிடம் எவ்வளவு எடுத்து சொல்லியும் நிரப்பப்படவில்லை. அப்போதைய கல்லுாரி முதல்வர் தற்காலிக ஏற்பாடாக 10 பேராசிரியர்களை நியமித்து, 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் தந்து வந்தார்.கல்லுாரி பேராசிரியர் பணியிடங்களை பொருத்தவரை, அது தற்காலிகமாக இருந்தாலும், நிரந்தரமாக இருந்தாலும் யு.ஜி.சி., வழிமுறை பின்பற்ற வேண்டும். அறிவிப்பு வெளியிட்டு நேர்காணல் நடத்தி பேராசிரியர்களை பணிக்கு தேர்வு செய்ய வேண்டும். அப்படி ஏதும் இல்லாததால் உயர்கல்வி துறை கேள்வி எழுப்பி, உடனடியாக நீக்க உத்தரவிட்டுள்ளது. இதில் யாரை குற்றம் சொல்ல வேண்டியது என்று தெரியவில்லை. காலியிடம் ஏற்படும்போது பேராசிரியர்களை நியமிக்க வேண்டியது உயர்கல்வி துறையின் பொறுப்பு. அதை சரிவர செய்யாததால் தான், மாணவர்களின் நலன் கருதி கல்லுாரி முதல்வர்கள் இப்படி தன்னிச்சையாகவும் முடிவுகளை எடுத்துவிட்டனர். எப்படி இருப்பினும் இந்த விவகாரத்தில் பேராசிரியர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வேலையை நம்பி ஏற்கனவே இருந்த வேலையை இவர்கள் ராஜினாமா செய்துவிட்டு வந்துள்ளனர். இவர்களுடைய எதிர்காலம் தான் இப்போது பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நேர்காணல் நடத்தி மீண்டும் பணி அமர்த்தலாம். புதிய வாய்ப்பினை தரலாம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ