| ADDED : ஜன 24, 2024 12:16 AM
காரைக்கால்:ஹிந்து கடவுள் ராமர், பிரதமர் மோடி மற்றும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோரை விமர்சித்து காரைக்காலைச் சேர்ந்த அன்சாரி பாபு என்பவர், சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் கணேஷ் தலைமையில், நகர தலைவர் ராஜ்குமார், சிவசுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை 11:30 மணிக்கு, காரைக்கால் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் புருேஷாத்தமன், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதை ஏற்று பகல் 12:00 மணிக்கு, ஹிந்து முன்னணியினர் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.