உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஹாக்கி நூற்றாண்டு விழா

 ஹாக்கி நூற்றாண்டு விழா

பாகூர்: குருவிநத்தம் கிராமத்தில், மேஜர் தயான்சந்த் ஹாக்கி கிளப் சார்பில், ஹாக்கி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் நடந்த விழாவிற்கு பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் துணைத் தலைவர் தவமுருகன் தலைமை தாங்கினார். தொழில் முனைவோர் பாலகுரு, வே ம்படி முத்து முன்னிலை வகித்தனர். நுாற்றாண்டு விழாவையொட்டி ஹாக்கி போட்டி நடந்தது. இதில், பெண்கள், ஆண்கள் இரு பிரிவிலும் கடலூர் சுந்தரவண்டி ஹாக்கி கிளப் முதலிடத்தையும், குருவிநத்தம் தயான்சந்த் ஹாக்கி கிளப் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. சிறப்பு விருந்தினராக புதுச்சேரி நலப்பணிச் சங்க தலைவர் வெற்றிவேல் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். ஏற்பாடுகளை தயான்சந்த் ஹாக்கி கிளப் செயலர் கார்த்திகேயன், பொருளர் பாபு, வருமான வரித்துறை பணியாளர் தயாளன், துணைச் செயலர் ரஞ்சித் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை