மேலும் செய்திகள்
மொபைல் கடை ஊழியர் மாயம்
26-Aug-2024
திருக்கனுார்: திருக்கனுாரில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க தனியார் பள்ளிக்கு சென்ற மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் ஆவுடையார்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர், தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி சிவபார்வதி, 38. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தற்போது, திருக்கனுார் காந்தி நகர் 2வது குறுக்கு தெருவில், வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.கடந்த 15ம் தேதி ஆவுடையார்பட்டில் நடந்த முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு, ஸ்ரீதர் தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். பின்னர், 16ம் தேதி நடந்த மண்டல அபிஷேகத்திற்கு அவரது மனைவி சிவபார்வதி, ஸ்ரீதரை அழைத்துள்ளார்.அதற்கு ஸ்ரீதர் தனக்கு வேலை இருப்பதால், மற்றொரு நாள் அழைத்துச் செல்கிறேன் என கூறியுள்ளார். இதனால், கணவன், மனைவி இடையேதகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் சிவபார்வதி திருக்கனூர் தனியார் பள்ளியில் பயின்று வரும் தனது குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதற்கு சென்றவர் மீண்டும் இதுவரையில் வீடு திரும்பவில்லை.இதுகுறித்து ஸ்ரீதர் அளித்த புகாரின் பேரில் திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
26-Aug-2024