/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேர்வில் 2 தாள்களும் பங்கேற்காவிட்டால் விடைத்தாள் மதிப்பீடு கிடையாது
தேர்வில் 2 தாள்களும் பங்கேற்காவிட்டால் விடைத்தாள் மதிப்பீடு கிடையாது
புதுச்சேரி: இளநிலை பொறியாளர், ஓவர்சீர் பணி தேர்வில் முழுமையாக பங்கேற்காத தேர்வர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.புதுச்சேரி பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளர் மற்றும் ஓவர்சீர் பணிக்கான, எழுத்து தேர்வு நாளை ஆறு மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வானது இரண்டு தாள்களை கொண்டது. இதில், முதல் தாள் தேர்வு காலையிலும் இரண்டாம் தாள் தேர்வு மதியமும் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள இரு தாள்களிலும் தேர்வர்களுக்கு, ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட உள்ளது.இதில் ஒரு தாள் தேர்வு மட்டும் எழுதி, இன்னொரு தாள் தேர்வில் பங்கேற்காத வர்களின் விடைத்தாள்மதிப்பீடு செய்யப்பட மாட்டாது என, தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.