உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சி.பி.ஐ., என பேசி மிரட்டினால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்

சி.பி.ஐ., என பேசி மிரட்டினால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்

புதுச்சேரி : சி.பி.ஐ., அதிகாரிகள் போன்று யாரேனும் பேசி மிரட்டினால், உடனடியாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்துபுதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தி:சமீப காலமாக பொதுமக்களுக்கு தெரியாததொலைபேசி எண்ணில் இருந்து மும்பை, டெல்லியில் காஸ்டம்ஸ் அதிகாரி, சி.பி.ஐ., அதிகாரி பேசுவதாக கூறி, உங்கள் பெயருக்கு பார்சலில் போலி பாஸ்போர்ட், சிம் கார்ட்ஸ் மற்றும் போதை பொருட்கள் கூறி, உங்களை கைது செய்ய உள்ளோம் என மிரட்டுவர்.மேலும் உங்களை கைது செய்யாமல் இருக்க ஐந்து முதல் பத்து லட்சம் வரை பணம் செலுத்த வேண்டும் எனவும் மிரட்டுவர். இதுபோன்று லட்சக்கணக்கில் பணத்தை இழந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆகையால் இதுபோன்று தங்களை யாரேனும் தொடர்பு கொண்டு மிரட்டி பணம் கேட்டால் நம்ப வேண்டாம். இது முற்றிலும் மிரட்டி பணம் பறிக்கும் இணையவழி குற்றவாளியின் செயலாகும்.எனவே, இதுபோன்ற அழைப்புகள் வந்தால், உடனடியாக சைபர் கிரைம் போலீசில் தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ