புதுச்சேரியில், 4 பேரிடம் ரூ. 41.53 லட்சம் மோசடி
புதுச்சேரி: புதுச்சேரியில், பெண் உட்பட 4 பேரிடம் 41.53 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர். புதுச்சேரி அடுத்த பாகூரை சேர்ந்தவர் ஷர்மிளா. இவரை டெலிகிராம் மூலம் ஒருவர் தொடர்பு கொண்ட மர்ம நபர் . வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி இவர் 40 லட்சம் பணத்தை அனுப்பினார். அந்த நபர் கொடுக்கப்பட்ட பணியை முடித்து விட்டு சம்பாதித்த பணத்தை எடுக்க முடியாமல் ஏமாற்றப்பட்டார்.மேலும், லாஸ்பேட்டை சேர்ந்த மகேந்திரவர்மா. இவரின் கிரெடிட் கார்டில் இருந்து அவருக்கு தெரியாமல், 23 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் எடுத்துள்ளனர். அதே போல, லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த தமிழரசன், இவர் தனியார் வங்கியில் கடன் வாங்கி திரும்பி செலுத்தியுள்ளார். இவரிடம் பேசிய நபர், மேலும் பணம் கட்ட வேண்டும். இல்லை என்றால், புகைப்படத்தை வெளியில் விடுவதாக மிரட்டினார். அதற்கு பயந்து, அவர் 30 ஆயிரம் பணத்தை அனுப்பி மர்ம நபரிடம் ஏமாந்தார். தொடர்ந்து, கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜோல் அலெக்ஸ். இவரிடம் பேசிய நபர், குற்ற வழக்கு தொடர்பாக, உங்களின் ஆதார் கார்டு, மொபைல் எண்னை பிளாக் செய்ய போகிறோம் என மிரட்டினார். அதற்கு பயந்து, அவர் 1 லட்சத்தை அனுப்பினார். பின் தான் மோசடி கும்பல் என தெரியவந்தது. இது குறித்து, 4 பேரும் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.