உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இடைவிடாமல் கொட்டி தீர்க்கும் கனமழை; புதுச்சேரியில் சாலைகள் வெள்ளக்காடானது!

இடைவிடாமல் கொட்டி தீர்க்கும் கனமழை; புதுச்சேரியில் சாலைகள் வெள்ளக்காடானது!

புதுச்சேரி: புதுச்சேரியில் இரவு முதல் தொடர்ந்து இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளை மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. இந்திரா காந்தி சிலை அருகில் உள்ள ஜவகர் நகரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை முதல்வர் ரங்கசாமி பார்வையிட்டார்.புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xnk3wan1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை காரணமாக பாவாணர் நகர், பூமியான்பேட்டை, ஜவஹர் நகர் பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சில வீடுகளுக்கும் தண்ணீர் புகுந்துள்ளது. வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மழை நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இதனால், சுற்றுலா தலங்களான கடற்கரை சாலை, பூங்காக்கள், நோணாங்குப்பம் படகு குழாம் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக உள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 497 கனஅடியில் இருந்து 1,400 கன அடியாக அதிகரித்துள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 25 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

பூண்டி ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு

பூண்டி ஏரியில் உபரி நீர் திறப்பு 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ